A16 நெடுஞ்சாலையில் எதிர்திசையில் பயணித்த மகிழுந்து.. இருவர் பலி!
3 தை 2025 வெள்ளி 07:49 | பார்வைகள் : 11950
பிரான்சின் வடக்கு பகுதியான பா து கலே மாவட்டத்தை ஊடறுக்கும் A16 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தொன்றில் இருவர் பலியாகியுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
61 வயதுடைய பெண் ஒருவர் Widehem (Pas-de-Calais) நகர் அருகே வீதியின் எதிர் திசையில் பயணித்துள்ளார். நீண்ட தூரம் பயணித்த நிலையில், வாகனம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்தில் குறித்த பெணும், எதிர் மகிழுந்தில் வந்த 52 வயதுடைய பெண்ணும் பலியாகியுள்ளனர். 46 வயதுடைய பயணி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று ஜனவரி 2 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan