இலங்கையில் மனைவியை கொலை செய்த கணவன் தப்பியோட்டம்
2 தை 2025 வியாழன் 15:43 | பார்வைகள் : 11559
குருணாகல், மெல்சிறிபுர, பன்சியகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மெல்சிறிபுர, பன்சியகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சந்தேக நபரான கணவன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan