புத்தாண்டு நாளில் காசாவில் குழந்தைகள் உட்பட15 பேர் பலி...!
2 தை 2025 வியாழன் 04:48 | பார்வைகள் : 5373
உலக நாடுகள 2025 புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடிவரும் நிலையில் காசாவின் ஜபாலியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு காசாவின் ஜபாலியா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் மற்றும் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய காசாவில் உள்ள புரேஜ் அருகில் உள்ள அகதிகள் முகாமில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளனர்.
மேலும், தெற்கு நகரமான கான் யூனிஸில் நடந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan