Paristamil Navigation Paristamil advert login

விண்வெளியில் புத்தாண்டை வரவேற்ற சுனிதா வில்லியம்ஸ் - 2025 பிறக்கும் நேரத்தில் 16 சூரிய உதயம்

விண்வெளியில் புத்தாண்டை வரவேற்ற சுனிதா வில்லியம்ஸ் - 2025 பிறக்கும் நேரத்தில் 16 சூரிய உதயம்

2 தை 2025 வியாழன் 04:37 | பார்வைகள் : 2569


சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கியுள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருந்தே புத்தாண்டை வரவேற்றுள்ளார்.

கடந்த ஜூன் 5 ஆம் திகதி விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளார். 

இதனால் வருகிற மார்ச் மாதம் தான் பூமிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்பட குழுவினர் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச விண்வெளி மையம் தெரிவிக்கையில், பூமிக்கு மேல் 400 கி.மீ உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் எக்ஸ்பெடிஷன் 72 குழுவினர், பூமியைச் சுற்றி வரும்போது 2025 பிறக்கும் தருணத்தில் 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் காண்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்