அண்ணா பல்கலை சம்பவம்: தேசிய மகளிர் ஆணைய குழுவினர் இன்றும் சென்னையில் விசாரணை

31 மார்கழி 2024 செவ்வாய் 02:48 | பார்வைகள் : 4759
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணைய குழுவினர், நேற்று(டிச.,30) 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்திய குழுவினர், போலீஸ் டி.ஜி.பி.,யையும் சந்தித்துப் பேசினர். இன்றும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போலீசார், திமு.க., பிரமுகர் ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் மாணவி பற்றிய முழு விவரங்களுடன் எப்.ஐ.ஆர்., வெளியான விவகாரம், பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக களம் இறங்கியுள்ளது.
நேற்று சென்னை வந்த மகளிர் ஆணைய உறுப்பினர்களான மம்தா குமாரி, பிரவின் ஷிவானிடே ஆகியோர், அண்ணா பல்கலையில் வெவ்வேறு துறைகளில் 7 மணி நேரம் நேரடியாக விசாரணை நடத்தினர்.
பல்கலை பேராசிரியர்கள், மாணவ, மாணவியரிடம் விசாரித்து பல்வேறு தகவல்களை சேகரித்தனர். தொடர்ந்து, இன்று மாலை கவர்னர் ரவியை, ராஜ் பவனில் சந்தித்த மகளிர் ஆணைய குழுவினர், போலீஸ் டி.ஜி.பி.,யையும் சந்தித்தனர். இன்றும் விசாரணை நடத்தப்போவதாக ஆணைய குழுவினர் தெரிவித்துள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025