Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச வர்த்தகத்தில் Bitcoin-ஐ பயன்படுத்திய  ரஷ்யா

சர்வதேச வர்த்தகத்தில் Bitcoin-ஐ பயன்படுத்திய  ரஷ்யா

27 மார்கழி 2024 வெள்ளி 12:59 | பார்வைகள் : 3479


ரஷ்யா சர்வதேச வர்த்தகத்தில் டிஜிட்டல் நாணயங்களைப் பயன்படுத்த  ஆரம்பித்துள்ளது .

மேற்கு நாடுகளின் பொருளாதார தடை நடவடிக்கைகளை சமாளிக்க, சர்வதேச வர்த்தகத்தில் Bitcoin மற்றும் பிற டிஜிட்டல் நாணயங்களை பயன்படுத்த ரஷ்ய நிறுவனங்கள் தொடங்கியுள்ளதாக ரஷ்ய நிதி அமைச்சர் ஆன்டன் சிலுவானோவ் (Anton Siluanov) தெரிவித்தார்.


பொருளாதாரத் தடைகள் காரணமாக சீனா, துருக்கி போன்ற முக்கிய வர்த்தக கூட்டாளர்களுடன் ரஷ்யாவின் பண பரிமாற்றங்கள் சிக்கலாகியுள்ளது.

ரஷ்யாவின் தொடர்புகளை மேற்கத்திய நாடுகள் கவனிப்பதால், உள்ளூர் வங்கிகள் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுகின்றன.


இந்த ஆண்டு, ரஷ்யா டிஜிட்டல் நாணயங்களை சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்த சட்டரீதியாக அனுமதித்ததோடு, பிட்காயினை mining மூலம் உருவாக்கும் செயல்பாடுகளையும் சட்டப்பூர்வமாக்கியது.


ரஷ்யாவில் உற்பத்தியாகும் பிட்காயின்களை சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தும் சோதனை முறையில் ஏற்கனவே பரிவர்த்தனைகள் நடைபெறுவதாகவும், இதனை விரிவுபடுத்து முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் சிலுவானோவ் Russia 24 தொலைக்காட்சியில் கூறியுள்ளார்.

டிஜிட்டல் நாணயங்கள் சர்வதேச பரிவர்த்தனைகளின் எதிர்காலமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.   

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்