எம்.எஸ்.தோனியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படம்

26 மார்கழி 2024 வியாழன் 09:38 | பார்வைகள் : 2404
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய புகைப்படம் வைரலாகியுள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பலரும் கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் வீரருமான எம்.எஸ்.தோனி தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
அப்போது அவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து தனது மனைவி மற்றும் மகளுடன் பண்டிகையை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது மனைவி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதோடு, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், எம்.எஸ்.தோனி கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த புகைப்படத்தை பகிர்ந்து santa Class என பதிவிட்டுள்ளது.