கஜகஸ்தான் விமானம் விழுந்து நொருங்கி விபத்து
26 மார்கழி 2024 வியாழன் 08:28 | பார்வைகள் : 5080
நத்தார் தினமான 25 ஆம் திகதி ரஷ்யாவுக்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 29 பேர் உயிர்பிழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
கஜகஸ்தானில் 69 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியதில் 38 பேர் உயிரிழந்துள்னர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அஜர்பைஜான் எயர்லைன்சிற்கு சொந்தமான விமானம் அகாட்டு நகரில் அவசரமாக தரையிறங்க முற்பட்டவேளை தீப்பிடித்தது.
ரஷ்யாவிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானம் பனி காரணமாக திருப்பிவிடப்பட்டவேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் நத்தார் தினத்தில் இடம்பெற்ற இந்த விமான விபத்து உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan