Paristamil Navigation Paristamil advert login

அக்சர் படேல்-மேகா தம்பதிக்கு ஆண் குழந்தை! இந்தியா ஜெர்சியுடன் வெளியிட்ட புகைப்படம்!

அக்சர் படேல்-மேகா தம்பதிக்கு ஆண் குழந்தை! இந்தியா ஜெர்சியுடன் வெளியிட்ட புகைப்படம்!

25 மார்கழி 2024 புதன் 08:42 | பார்வைகள் : 2662


இந்திய கிரிக்கெட் அணி வீரர் அக்சர் படேல் அவரது மனைவி மேகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் அக்சர் படேல் மற்றும் அவரது மனைவி மேகா தம்பதியருக்கு கடந்த 19-ம் திகதி அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை அக்சர் படேல் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குஜராத் மாநிலம் வதோதராவில் கோலாகலமாக நடைபெற்ற திருமணத்திற்குப் பிறகு, இந்த தம்பதியருக்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தனது சமூக ஊடகத்தில்,  இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்தவாறு புதிதாக பிறந்த தங்களது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அக்சர் படேல், தனது குழந்தைக்கு 'ஹக்ஷ் படேல்’(Haksh Patel) என பெயரிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி அக்சர் படேலின் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


குழந்தை பிறந்து 5 நாட்களுக்கு பிறகு அக்சர் படேல் இந்த செய்தியை தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்