கேரளா, பீஹார், மணிப்பூர், ஒடிசா,மிசோரம் மாநில கவர்னர்கள் மாற்றம்
25 மார்கழி 2024 புதன் 05:34 | பார்வைகள் : 4528
கேரள, பீஹார், மிசோரம் மாநில கவர்னர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மணிப்பூர், ஒடிசா மாநிலங்களுக்கு புது கவர்னர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஒடிசா கவர்னராக இருந்த ரகுபர் தாசின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.
கேரள கவர்னராக இருந்த ஆரிப் முகமது கான்- பீஹார் கவர்னராகவும்,
பீஹார் கவர்னராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் -கேரள கவர்னராகவும்
மிசோரம் கவர்னராக இருந்த ஹரி பாபு கம்பம்பதி- ஒடிசா கவர்னராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.
மிசோரம் கவர்னராக முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் குமார் சிங்கும்
மணிப்பூர் கவர்னராக முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan