திருப்பரங்குன்ற சம்பவம்; சட்டம் - ஒழுங்கை சீர்கெடுக்கும் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
25 தை 2025 சனி 03:56 | பார்வைகள் : 6807
திருப்பரங்குன்றத்திற்கு அப்துல் சமது, நவாஸ் கனி வந்தது சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் செயல், என,திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., சட்டசபை குழு தலை வர் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இங்கு மலைமீதுள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்ய நயினார் நாகேந்திரன், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று வந்தனர்.
பின், நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
எம்.எல்.ஏ., அப்துல் சமது - எம்.பி., நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு செய்துள்ளனர். இது, பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. நான் கூட இங்கே வந்திருக்க மாட்டேன். அவர்கள் வந்ததால், நாங்களும் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
பெற்றோர் நமக்கு கற்றுக்கொடுத்தது கடவுள் வழிபாடு. அதை விட்டுக் கொடுக்கவோ, மாற்றவோ முடியாது. மலை மேல் முன்னர் அசைவம் சமைத்தது கிடையாது. புதிய பழக்கத்தை ஏற்படுத்த வேண்டாம். இதற்கு முன் என்ன பழக்கம் இருந்ததோ அதை கடைப்பிடிப்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை.
அவர்கள் இது எங்கள் மலை, எங்களுக்கு சொந்தம். இப்பழக்கத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்பது, சட்டம் - ஒழுங்கை சீர்கெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காடேஸ்வர சுப்ரமணியம் கூறுகையில், ''மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்,'' என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan