Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பியாவில் அமெரிக்க படைகள் தொடர்பில் டிரம்பின் புதிய திட்டம்

ஐரோப்பியாவில் அமெரிக்க படைகள் தொடர்பில் டிரம்பின் புதிய திட்டம்

24 தை 2025 வெள்ளி 12:34 | பார்வைகள் : 7531


ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ படையின் இருப்பை(presence) 20% வரை குறைக்க அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

ஐரோப்பிய பிராந்தியத்தில் இருந்து கிட்டத்தட்ட 20,000 அமெரிக்க ராணுவ வீரர்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திரும்ப பெற திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய ராஜதந்திர ஆதாரங்களை மேற்கோள் காட்டி இத்தாலிய செய்தி நிறுவனமான ANSA தெரிவித்துள்ள தகவலில், இந்த முடிவு தற்போது உள்ள படைகளில் 20% குறைக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஐரோப்பாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ படைகளுக்கு ஐரோப்பிய நாடுகள் நிதி வழங்க வேண்டும் என்று டிரம்ப் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்க படைகளை பராமரிப்பதற்காக எவ்வளவு தொகை ஐரோப்பிய நாடுகளிடம் வாங்கலாம் என்பதை  யூகிப்பது மிக விரைவான நடவடிக்கை என்றும் ANSA தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்