'இந்தியன் 3' படத்திற்கு சிக்கல் ஏற்படுமா ?

24 தை 2025 வெள்ளி 09:28 | பார்வைகள் : 3893
இந்தியத் திரையுலகத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா படங்களாக ஷங்கர் இயக்கிய 'இந்தியன் 2, கேம் சேஞ்ஜர்' ஆகிய படங்கள் இருந்தன. கடந்த வருடம் தமிழில் வெளிவந்த 'இந்தியன் 2' படம் , தெலுஙகில் பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' படம், இரண்டுமே தலா 400 கோடி செலவில் தயாரான படங்கள் என்று சொல்லப்பட்டது. இரண்டு படங்களும் சொல்லி வைத்தாற் போல் 200 கோடி மட்டுமே வசூலித்தது. இரண்டு படங்களும் குறைந்தபட்சம் 200 கோடி நஷ்டத்தைத் தந்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'இந்தியன் 2' படம் தயாரான போதே கூடுதலான காட்சிகள் வந்ததால் படத்தின் மூன்றாவது பாகத்தையும் வெளியிட திட்டமிட்டார்கள். இதனிடையே 'இந்தியன் 2' படமும் தோல்வியடைந்து, 'கேம் சேஞ்ஜர்' படமும் தோல்வியடைந்ததால் 'இந்தியன் 3' படத்திற்கு வியாபார சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் என்ற 'பிராண்ட் நேம்' இந்த இரண்டு படங்களில் மவுசு குறைந்துவிட்டது. அதனால், 'இந்தியன் 3' படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று பேச்சு எழுந்துள்ளது. மேலும், 'இந்தியன் 3' படத்தை முடிக்க இன்னும் சில பல கோடிகள் செலவு செய்தாக வேண்டுமாம். அமெரிக்காவிலிருந்து கமல்ஹாசன் திரும்பிய பிறகே 'இந்தியன் 3' பற்றிய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1