மணிரத்னம் அடுத்த படம் தொடர்பில் அதிரடி தகவல் ..
24 தை 2025 வெள்ளி 09:08 | பார்வைகள் : 4792
சமீப காலமாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்கள் பிரமாண்டமாகவும், மல்டி-ஸ்டார் படங்களாகவும் இருந்து வருகின்றன. இந்த நிலையில், அவரது அடுத்த படம் மிகவும் சின்ன பட்ஜெட்டில் புதுமுகங்கள் நடிக்கும் படமாக இருக்கும் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ மற்றும் தற்போது உருவாகி வரும்’ தக்ஃலைப்’ ஆகியவை மல்டி-ஸ்டார் படங்களாக உருவாகியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில், மணிரத்னம் அடுத்த திரைப்படம் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் திரைப்படமாக இருக்கும் என்றும், இந்த படத்தை மிகவும் சின்ன பட்ஜெட்டில் அவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கௌதம் கார்த்திக், துளசி போன்ற புதுமுகங்களை வைத்து மணிரத்னம் படம் இயக்கினாலும், அவர் சமீப காலமாக படங்கள் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் ஒரு சின்ன பட்ஜெட்டில், வித்தியாசமான கதை அம்சத்துடன் கூடிய படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், "இதெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கா?" என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
சமீப காலமாக பெரிய பட்ஜெட் படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாததை அடுத்து, மணிரத்னம் சின்ன பட்ஜெட் படத்தை எடுக்கப் போவதாக ஒரு சிலர் கூறினாலும், இந்த படத்தில் அவரது மேக்கிங் பாணியில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்றும், இந்த படமும் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan