11 மில்லியன் மக்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். குறையுமா தொற்று?

21 தை 2025 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 3492
கடந்த ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி நடுப்பகுதி வரை 'Grippe' தொற்றுநோய் மிகவும் அதிகமான தாக்கத்தை பிரான்ஸ் முழுவதும் ஏற்படுத்தி இருந்தது. பல ஆயிரக்கணக்கான மரணங்களும் சம்பவித்து இருந்தது. இந்த நிலையில் 'FSPF' 11 'மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன என்றும் மருந்தகங்களில் Grippe தொற்றுநோய்க்கான தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
பிரான்சின் மருந்தக யூனியன்களின் கூட்டமைப்பின் தலைவர் Philippe Besset தெரிவிக்கையில் "நாங்கள் தடுப்பூசி பிரச்சாரத்தின் முடிவில் இருக்கிறோம். இது நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது, ஜனவரி 31 வரை இயங்கும். அதேவேளை கடந்த ஆண்டை விட அதிகமாக தடுப்பூசி போட்டுள்ளோம் அதனால் தான் டோஸ் குறைவாக உள்ளது. நாம் கிட்டத்தட்ட 11 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட முடிந்தது. இது கடந்த ஆண்டை விட அதிகம், இது ஒரு நல்ல செய்தி" என தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர் அடுத்த ஆண்டு அதிகப்படியாக தடுப்பூசிகளை தயாரிக்கும்படி மருந்தகங்களையும், அதிகப்படியான தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும்படி சுகாதார அமைச்சரையும் தாம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ளார். எவ்வாறு இருப்பினும் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என சுதாகர அமைப்பு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
