Paristamil Navigation Paristamil advert login

இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்

இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்

20 தை 2025 திங்கள் 14:11 | பார்வைகள் : 9689


உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது.

இந்த செயலியில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இனி 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது

முன்னதாக, இன்ஸ்டாகிராமில் 90 விநாடிகள் வரையிலான ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளும் வசதி இருந்தது.

கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் பதிவிட முடியும் புகைப்படங்களின் எண்ணிக்கையை 10ல் இருந்து 20 ஆக மெட்டா நிறுவனம் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்