விமான கட்டணங்களை அதிகரிப்பது பொறுப்பற்ற செயல்.. எயார் பிரான்ஸ் இயக்குனர் சீற்றம்!
20 தை 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 7670
விமான பயணச்சீட்டுக்களுக்கு புதிய வரி அறவிடப்படும் என பிரெஞ்சு அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, அதனை எயார் பிரான்ஸ் நிறுவனத்தின் (Air France-KLM) இயக்குனர் பெஞ்சமின் ஸ்மித் கண்டித்துள்ளார்.
”சென்ற வருடம் ஏற்கனவே புதிய வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, தற்போது புதிய வரி அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டமை முழுக்க முழுக்க பொறுப்பற்ற செயலாகும். ஐரோப்பாவில் அதிக விமான கட்டணங்கள் கொண்ட நாடாக பிரான்ஸ் இருக்கும்!” என பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொது நிதிய மற்றும் கணக்கு அமைச்சரான Amélie de Montchalin, சென்றவாரம் “நாட்டின் பொது பற்றாக்குறையை நீக்க, விமான பயணச்சிட்டைகளுக்கான வரி அதிகரிக்க ஆதரவு வழங்குவதாக’ அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் மிஷல் பார்னியே 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தயாரிக்கையில், விமான கட்டணங்கள் அதிகரிப்பது தொடர்பில் அவர் அறிவித்திருந்தார். ஆனால் அந்த வரவுசெலவு திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan