Paristamil Navigation Paristamil advert login

பாடசாலைகளில் 100% சைவ உணவு வழங்கும் முயற்சி ஆரம்பம்.

பாடசாலைகளில் 100% சைவ உணவு வழங்கும் முயற்சி ஆரம்பம்.

18 தை 2025 சனி 08:19 | பார்வைகள் : 13874


உயிரினங்கள் மேல் கருணை, சைவ உணவின் மேன்மை, அசைவ உணவுக்கு சமமான ஊட்டச்சத்து சைவ உணவிலும் உண்டு என்பதன் விளக்கம் "உணவே கல்வி" போன்ற வற்றை மாணவர்களுக்கு ஊட்டும் முகமாக பாடசாலை உணவகத்தில் 100%சதவீத சைவ உணவை வழங்கும் திட்டம் கடந்த வியாழக்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

பாடசாலைகளும் உணவு தயாரிக்கும் சமையல்காரர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும், கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு இணைந்து மாணவர்களின் உணவில் சற்றும் குறையாத ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எப்படி சைவ உணவில் வழங்க முடியும் என ஆராய்ந்து இந்த திட்டம் தயாரிக்கப்பட்டது என அறியமுடிகிறது.

உதாரணமாக சிவப்பு பீன்ஸ், பால், வெள்ளை பீன்ஸ் போன்ற ஊட்டச்சத்து சமநிலை தரும் உணவுகளை தாம் தயாரிப்பதாக பாடசாலைகளின் உணவுக்குப் பொறுப்பான இயக்குனர் Christophe Demeyer  தெரிவித்துள்ளார். ஆனால் குறித்த சில பெற்றோர்கள் பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், நேரடியாகவும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். எனவும் அறியப்படுகிறது.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    2

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்