வெள்ளம் : 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

18 தை 2025 சனி 07:00 | பார்வைகள் : 9648
ஜனவரி 18, இன்று சனிக்கிழமை வெள்ள அனர்த்தம் காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக வீதிகளிலும், வீடுகளுக்குள்ளும் வெள்ளம் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக Météo-France
அறிவித்துள்ளது. Aisne, Ardennes, Aube, Charente-Maritime, Eure, Marne, Meuse, Oise, Seine-Maritime, Seine-et-Marne, Somme மற்றும் Vendée ஆகிய 12 மாவட்டங்களுக்கு “மஞ்சள்” நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பனிப்பொழிவின் காரணமாக கடந்த வாரம் முழுவதும் விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3