Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தான் எயார்லைன்சின் விளம்பரத்தினால் சர்ச்சை.. மன்னிப்புக்கோரியது!!

பாகிஸ்தான் எயார்லைன்சின் விளம்பரத்தினால் சர்ச்சை.. மன்னிப்புக்கோரியது!!

17 தை 2025 வெள்ளி 15:10 | பார்வைகள் : 2604


ஈஃபிள் கோபுரத்தை 'தகர்ப்பது' போல் விளம்பரம் ஒன்றை உருவாக்கி வெளியிட்டதை அடுத்து, பாகிஸ்தான் விமான சேவை நிறுவனம் ஒன்று மன்னிப்புக் கோரியுள்ளது.

பாகிஸ்தானின் PIA (ஆங்கிலத்தில் : Pakistan International Airlines) விமான சேவைகளுக்கு ஐரோப்பாவில் தடை விதிக்கப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளின் பின்னர் அந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதை அடுத்து இஸ்லாமாபாத்தில் இருந்து பரிசுக்கான முதலாவது விமானம் ஜனவரி 10 ஆம் திகதி வந்தடைந்தது. விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க PIA நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. இந்த விளம்பரமே தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நிறுவனத்தின் விமானம் ஒன்று ஈஃபிள் கோபுரத்தை தகர்ப்பது போன்று கோபுரத்தை நோக்கி பறப்பதாக காட்சிப்படுத்தப்பட்டு 'நாங்கள் பரிசுக்கு வருகிறோம் ( 'we re coming to Paris' ) எனும் அர்த்தமாகும் வகையில் வாசகங்களும் எழுதப்பட்டிருந்தது.

இந்த காணொளி உடனடியாகவே அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலை நினைவுகூருவதாக சர்ச்சை எழுப்பப்பட்டது.

அதை அடுத்து குறித்த விமான நிறுவனம் உடனடியாக மன்னிப்புக் கோரியுள்ளது. அதேவேளை, பாகிஸ்தானின் துணை பிரதமர் இது தொடர்பில் உள்ளக விசாரணைகள் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்