லண்டன் பேருந்தில் கத்தி தாக்குதல் - 14 வயதுச் சிறுவன் பலி
17 தை 2025 வெள்ளி 13:02 | பார்வைகள் : 5577
பிரித்தானியாவில் லண்டன் நகரத்தில் 14 வயதுச் சிறுவனைப் பேருந்தில் கத்தியால் குத்திக்கொன்ற 2 பதின்ம வயதுச் சிறுவர்கள் 15 ஜனவரி 2025 கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 15, 16 வயதுடையவர்கள் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்குமுன் பல கத்திக்குத்துச் சம்பவங்கள் நடந்த வூல்விச் (Woolwich) பகுதியில் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நடந்ததற்கு முன்தினம் 18 வயதுச் சிறுவன் சம்பவ இடத்திற்குச் சில கிலோ மீட்டர் தூரத்தில் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமுற்றதாக AFP செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு 2024 லண்டனில் 10 பதின்ம வயதுச் சிறுவர்கள் கத்திக்குத்துத் தாக்குதல்களால் மாண்டனர்.
நீதித்துறை அமைச்சு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் 2017 ஆம் ஆண்டு, 10 முதல் 17 வயதுடைய 27,000 பதின்ம வயதுச் சிறுவர்கள் குண்டர் கும்பல்களில் உறுப்பினர்களாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan