Paristamil Navigation Paristamil advert login

உலகக்கிண்ணத்தில் சாம்பியனாக சாதனைப்படைத்த வீரர் ஏன் அணியில் இல்லை...? முன்னாள் வீரர் கேள்வி

உலகக்கிண்ணத்தில் சாம்பியனாக சாதனைப்படைத்த வீரர் ஏன் அணியில் இல்லை...? முன்னாள் வீரர் கேள்வி

15 தை 2025 புதன் 12:38 | பார்வைகள் : 4455


இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் தூபே தேர்ந்தெடுக்கப்படாதது ஏன் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். 

ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பல போட்டிகளில் வெற்றி பெற வைத்த இருவர் ஷிவம் தூபே (Shivam Dube), ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad).

இவர்களில் தூபே டி20 உலகக்கிண்ண போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.


இதில் தூபே, ருதுராஜின் பெயர்கள் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 

அவர் கூறுகையில், "ஷிவம் தூபேவுக்கு என்னவாயிற்று? ருதுராஜ் பற்றியும் நான் பேச விரும்புகிறேன். ரஜத் படிதாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஷிவம் துபே டி20 உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். 

அத்தொடரில் ஆரம்பத்தில் சுமாராக விளையாடிய அவர் இறுதிப் போட்டியில் நன்றாக விளையாடினார். அவர் டி20 உலகக்கிண்ண சாம்பியனாக சாதனையும் படைத்தார். அதன் பின் கொஞ்சம் காயத்தை சந்தித்த அவர் தற்போது அணியிலேயே இல்லை.

அதைப்பற்றி யாரும் பேசவும் இல்லை. ரியான் பராக் காயத்தை சந்தித்தால் யாரும் பேசவில்லை. ஆனால், தூபே தற்போது குணமடைந்தும் திடீரென அணியில் இருந்து காணாமல் போயுள்ளார். 

உலகக்கிண்ண அணியில் விளையாடுவதற்கு போதுமானவராக அவர் இருந்தால் இன்னும் சில வருடங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்.

இல்லையென்றால் ஏன் உலகக்கிண்ணத்தில் தேர்ந்தெடுத்தீர்கள்? முன்பெல்லாம் காயத்தை சந்தித்து வெளியேறுபவர்கள் மீண்டு வரும்போது அவர்களுடைய இடத்தில அசத்துபவர்கள், அவர்களுக்காக வழி விட வேண்டும் என்ற கூற்று இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் என்ன செய்தாலும் இடம் கிடைப்பது கடினமாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.     

13 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்