சேதமான ஒலிம்பிக் பதக்கங்களை மாற்ற முடியும் என CIO அறிவிப்பு!!

14 தை 2025 செவ்வாய் 14:24 | பார்வைகள் : 3925
2024 ஆம் ஆண்டு பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது வழங்கப்பட்ட பதக்கங்கள் சேதமடைவதாக பல வீரர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில், உடைந்த அல்லது சேதமடைந்த அனைத்து பதக்கங்களையும் மாற்ற முடியும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (CIO) அறிவித்துள்ளது.
சென்ற ஒலிம்பிக் போட்டிகளுக்காக வழங்கப்பட்ட பதக்கங்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர் குற்றச்சாட்டுக்களை அடுத்து பதக்கங்களை மாற்றிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.