Paristamil Navigation Paristamil advert login

நிரம்பி வழியும் சென் நதி.. !!

நிரம்பி வழியும் சென் நதி.. !!

13 தை 2025 திங்கள் 16:17 | பார்வைகள் : 7038


கடந்த சில நாட்களாக பரிசில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென் நதியின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. சில இடங்களில் வெள்ளம் நடைபாதைகளை எட்டியுள்ளது.

ஜனவரி 9 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரையான நாட்களில் பெய்த மழை காரணமாக, சென் நதியின் நீர்மட்டம் 70 செ.மீற்றர்களாக அதிகரித்து தற்போது 3.65 மீற்றர் உயரத்தை எட்டியுள்ளது.

அதை அடுத்து சில உயரம் குறைந்த சென் நதிக்கரைகளில் நீர் மட்டம் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ளதை காணக்கூடியதாக இருந்தது.

அதேவேளை, பரிசில் அடுத்த சில நாட்களுக்கும் மழை அறிவிக்கப்பட்டுள்ளதால், சென் நதியின் பல இடங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்