இலங்கையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு

13 தை 2025 திங்கள் 08:18 | பார்வைகள் : 6641
கம்பளை, தவுலகல பிரதேசத்தில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி இன்று திங்கட்கிழமை அம்பாறையில் கண்டுபிடிக்கப்பட்டதோடு கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இன்று காலை அம்பாறை பஸ் நிலையத்தில் இருந்து கண்டிக்கு செல்வதற்காக பஸ்ஸில் காத்திருந்தபோதே மாணவியும் சந்தேக நபரும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று இரவு அம்பாறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடத்தப்பட்ட மாணவியையும் சந்தேக நபரையும் கண்டுபிடிக்க 05 பொலிஸ் குழுக்களை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இக்குழுக்களின் தேடுதல் நடவடிக்கையின்போதே இன்று காலை மாணவியையும் சந்தேக நபரையும் கண்டுபிடித்து, இருவரிடமும் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.