உடலின் எடையைக் குறைக்க அறிமுகமான 'monodiète' உணவுமுறை ஆபத்தானது!
11 தை 2025 சனி 07:50 | பார்வைகள் : 16038
புதிய ஆண்டில் பலர் எடுக்கும் தீர்மானங்களில் ஒன்று உடல் எடையைக் குறைப்பது. இதற்கு சமூகவலைத்தளங்களில் பலரும் பலவிதமான கருத்துக்களை, காணொளிகளை தமக்கு தெரிந்த வகையில் பதிவிட்டுள்ளனர் அதில் ஒன்றுதான் 'monodiète' உணவுமுறை. இது இப்போது பிரான்சில் மிகப் பிரபல்யமாகயுள்ளது.
அதாவது சகலவிதமான உணவுகளையும் தவிர்ப்பது விட்டு, தனியே மாமிச உணவை மூன்று வேளையும் ஒரேமாதிரி தயாரித்து உண்பது. அதற்கு அவர்கள் தரும் விளக்கம் "மாமிசத்தை மட்டும் உண்ணும் போது அதனை உடைத்து சமிபாடடைய செய்வதற்கு அதிக சக்தியை உடல் எடுத்துக் கொள்ளும் அதனால் உடல் எடை மிக வேகமாக குறையும்" என்பதாகும்.
"இது ஒரு பயனற்ற, பாதுகாப்பற்ற, ஆபத்தான உணவுமுறை" ஊட்டச்சத்து நிபுணர் M.Pascal Nourtier கூறும் போது "ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதோடு, குறைபாடுகளின் நோய் அபாயங்களையும் ஏற்படுத்தும். மயக்கம், தளர்வு, சுவாசம் போன்றவையும் பாதிக்கப்படும்". என கூறும் மருத்துவர் "மன அழுத்தம், மார்படைப்பு போன்றவை ஏற்படலாம்" என எச்சரிக்கிறார்.
மருத்துவ உலகம் எடையைக் குறைக்க அல்லது கட்டுப்படுத்த படிப்படியாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையே பரிந்துரைக்கிறது அதாவது உணவுமுறையில் காய்கறிகள், உலர்ந்த மாவுச்சத்து உணவுகள், தானியங்கள், இறைச்சி, பழங்கள் மற்றும் நிறைய தண்ணீர் உடல் பயிற்சி இந்த. முறையே சிறந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan