சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை...! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

10 தை 2025 வெள்ளி 08:32 | பார்வைகள் : 6853
சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் பல நகரங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெய்த கன மழையால் சாலைகள் முழுவதும் ஆறுகள் போல காட்சியளித்தன. குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கட்டிடங்கள், வாகனங்கள், சாலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதோடு ஓமனில் 21 பேரும் அரபு அமீரகத்தில் 4 பேரும் உயிரிழந்தனர்.
இவ்வாறு இருக்கையில், கடந்த 2 நாட்களில் சவுதியில் 4.9 செ.மீ மழையும், ஜெட்டா நகரில் 3.8 செ.மீ மழையும் பெய்துள்ளது.
மேலும் இந்த வாரம் முழுவதும் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகணத்தில் ஆலங்கட்டி மழை மற்றும் துசியான காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மக்கள் பொது இடங்களுக்கு செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் எச்சரிக்கயாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025