இலங்கையில் பதிவு செய்யப்படாத தொலைபேசிகளுக்கு தடை!
9 தை 2025 வியாழன் 13:53 | பார்வைகள் : 12857
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் (TRC) பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது எதிர்காலத்தில் நாட்டினுள் தடைசெய்யப்படும் என்று அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டிற்குள் சட்டவிரோதமாக தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதே இதன் நோக்கம் என்று அதன் பணிப்பாளர் ஜெனரல் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்தார்.
இந்த மாத இறுதிக்குள் இதற்காக ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், இந்த புதிய திட்டம் தற்போது பயன்படுத்தப்படும் கையடக்க தொலைபேசிகளில் தலையிடாது என்று அவர் தெரிவித்தார்.
"முறையான தரநிலைகள் இல்லாமல் சட்டவிரோத தகவல் தொடர்பு சாதனங்களை வாங்குவதன் மூலம் நாட்டு மக்கள் பல்வேறு சிரமங்களையும் தடைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
நாட்டில் உள்ள நுகர்வோருக்கு இதுபோன்ற சாதனங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பது எமது நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாகும்.
இதற்காக, இந்த மாத இறுதிக்குள் ஒரு தானியங்கி அமைப்பை செயல்படுத்த எதிர்பார்க்கின்றோம்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், இறுதியில் நாட்டிற்குள் சட்டவிரோதமாக கையடக்க தொலைபேசிகளை இறக்குமதி செய்வதைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும்.
"இந்த அமைப்பு தற்போது பயன்பாட்டில் உள்ள எந்த கையடக்க தொலைபேசிகளையும் பாதிக்காது என்பதுடன், வெளிநாட்டினர் பயன்படுத்தும் தொலைபேசிகளுக்கும் எந்த தடையும் ஏற்படுத்தாது என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan