யாழில் கோர விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு
9 தை 2025 வியாழன் 06:34 | பார்வைகள் : 12019
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த தாவில் வித்துவான் விஜயகுமார் மணிகண்டன் என்ற 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை வல்லைப் பகுதியில், மாட்டுடன் மோதி எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan