Essonne : வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!
8 தை 2025 புதன் 09:32 | பார்வைகள் : 8333
Brétigny-sur-Orge (Essonne) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
நேற்று ஜனவரி 7 ஆம் திகதி செவ்வாய்கிழமை முற்பகல் 11.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள வீடொன்றில் இருந்து காவல்துறையினர் அழைக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். வீட்டின் கதவை திறந்தபோது, நபர் ஒருவர் கதவின் பின்னால் மறைந்திருந்து காவல்துறையினரை தாக்கியுள்ளார்.
திடீர் தாக்குதலுக்கு இலக்கான காவல்துறையினர் பின்னர் சுதாகரித்துக்கொண்டு குறித்த நபரைக் கைது செய்தனர். அவ்வீட்டில் இருந்த 4 மற்றும் 7 வயதுடைய இரு பிள்ளைகளை மீட்டனர்.
அத்தோடு, 34 வயதுடைய பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி இரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர் 29 வயதுடையவர் எனவும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan