42 ரன்னுக்கு இலங்கை அணி ஆல்அவுட்! அதிர்ச்சி கொடுத்த ஒற்றை வீரர்

28 கார்த்திகை 2024 வியாழன் 14:17 | பார்வைகள் : 3515
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி 42 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
டர்பனில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து இலங்கை அணி களமிறங்கியது.
மார்கோ யென்சென்னின் (Marco Jansen) துல்லியமான பந்துவீச்சில் இலங்கை அணி சீட்டுக்கட்டுபோல் சரிந்தது.
கமிந்து மெண்டிஸ் (13), லஹிரு குமாரா (10) ஆகிய இருவரைத் தவிர எவரும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை.
13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி 42 ஓட்டங்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்துவீசிய யென்சென் 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோட்ஸி 2 விக்கெட்டுகளும், ரபாடா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து 149 ஓட்டங்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025