Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

27 கார்த்திகை 2024 புதன் 13:03 | பார்வைகள் : 5647


ஜப்பானில் 6.4 ஆக ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சில இடங்களில் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

ஜப்பானின் மேற்கு கடலோர பகுதிகளில் இந்த நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

கடந்த ஜனவரி மாதம் இந்த பிராந்தியத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது.

அந்த பாதிப்பில் இருந்தே இன்னும் முழுமையாக மீளாத நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்