மின் விளக்குகளால் மிளிரும் சோம்ப்ஸ்-எலிசே!!
25 கார்த்திகை 2024 திங்கள் 13:17 | பார்வைகள் : 9576
உலகின் மிக அழகான வீதி என வர்ணிக்கப்படும் சோம்ப்ஸ்-எலிசே, தற்போது விழாக்கோலம் பூண்டு மேலும் அழகாக மாறியுள்ளது.. சோம்ப்ஸ்-எலிசேயில் உள்ள மரங்கள் மீது மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, அவை ஒளிரவிடப்பட்டுள்ளன. புது வருடத்தை வரவேற்கும் நோக்கில் ஆண்டுதோறும் இந்த அலங்காரம் இடம்பெற்று வருகிறது.
நேற்று நவம்பர் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த மின் விளக்குகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனை பிரெஞ்சு படகுப்போட்டி வீரர் Tony Estanguet, ஆரம்பித்து வைத்தார்.
ஜனவரி மாதத்தின் முதல் வாரம் வரை ஒவ்வொரு நாளும் மாலை முதல் நள்ளிரவு வரை இந்த மின் விளக்குகள் ஒளிரவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan