IPL 2025 ஏலம் ஆரம்பம்: வரலாற்றில் அதிகதொகைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர்

25 கார்த்திகை 2024 திங்கள் 07:23 | பார்வைகள் : 3740
2025 ஐபிஎல் டி20 தொடருக்கான ஏலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஜோஸ் பட்லர் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் டி20 தொடருக்கான ஏலம் தொடங்கியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடி தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அவர் மிகவும் விலையுயர்ந்த வீரராக மாறினார்.
ஆனால், சில நிமிடங்களில் ரிஷாப் பண்ட்-ஐ லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ.27 கோடிக்கு வாங்கி வரலாற்றை திருத்தியது.
ரூ.2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட ஜோஸ் பட்லர் (Jos Buttler), ரூ.15.75 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.