சதம் விளாசி மீண்டுமொரு சாதனை படைத்த ஜெய்ஸ்வால்! குவியும் பாராட்டு
24 கார்த்திகை 2024 ஞாயிறு 09:13 | பார்வைகள் : 6467
யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெர்த் மைதானத்தில் சதம் விளாசி சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது.
நேற்றைய ஸ்கோர் 90 உடன் ஆட்டத்தைத் தொடர்ந்த ஜெய்ஸ்வால் தனது 4வது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார்.
மேலும் அவுஸ்திரேலிய மண்ணில் இது அவரது முதல் சதம் ஆகும். அத்துடன் சாதனைப் பட்டியலிலும் இணைந்துள்ளார்.
பெர்த் மைதானத்தை இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், அமர்நாத், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் மட்டுமே சதம் அடித்திருந்தனர்.
தற்போது ஜெய்ஸ்வால் ஐந்தாவது நபராக இணைந்துள்ளார். தொடர்ந்து ஆடிய அவர் 3 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 161 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

























Bons Plans
Annuaire
Scan