இலங்கையில் கழுத்தறுத்து ஒருவர் கொலை
23 கார்த்திகை 2024 சனி 11:23 | பார்வைகள் : 10976
கொஸ்லந்த, ஹமுதுருகந்த பிரதேசத்தில், ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில - அரம்பேகெம பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய நபரே, இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட நபர் கடந்த 18ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் 45 வயதுடைய மற்றுமொரு நபருடன் ஹமுதுருகந்த பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் காணாமல் போனவரின் கழுத்தை அறுத்து தலையை புதைத்ததாக, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதன்படி, கொலை செய்யப்பட்ட நபரின் தலை மற்றும் உடற்பகுதியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய பெண்ணொருவரையும் கைதுசெய்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan