அஜித்தின் அடுத்த திட்டம் இதுவா?
23 கார்த்திகை 2024 சனி 10:20 | பார்வைகள் : 4295
அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளையுடன் இந்த ஷெட்யூல் முடிவடையும் எனவும், அதன் பின்னர் அஜித்தின் திட்டம் என்ன என்பதை பற்றிய தகவல் கசிந்து வருகிறது.
அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’, மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 'விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது.
அதேபோல், ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. இதில் அஜித் , த்ரிஷா உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டனர். தற்போது, இந்த ஷெடியூல் நாளையுடன் முடிவடைய உள்ளது.
இதனை தொடர்ந்து, அஜித் தனது கார் ரேஸ் மீது கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ஐரோப்பாவில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொள்ள உள்ளதால், அஜித் மற்றும் அவரது அணியினர் அந்த போட்டிக்காக பயிற்சி மேற்கொள்வதாக தெரிகிறது.
இந்த நிலையில் ‘குட் பேட் அக்லி’ படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ’விடாமுயற்சி’ திரைப்படம் கோடை விடுமுறையிலோ, அல்லது அஜித்தின் பிறந்த நாளிலோ வெளியாகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan