அறிமுக போட்டியிலேயே அவுஸ்திரேலியாவை நொறுக்கிய வீரர்! 104 ரன்னுக்கு ஆல்அவுட்

23 கார்த்திகை 2024 சனி 08:52 | பார்வைகள் : 4385
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா 104 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பெர்த்தில் நடந்து வரும் முதல் டெஸ்டில் இந்திய அணி 150 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ஓட்டங்களும், ரிஷாப் பண்ட் 37 ஓட்டங்களும் எடுத்தனர். ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி பும்ராவின் தாக்குதல் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் பும்ரா விக்கெட்டுகளை வீழ்த்த, மறுபுறம் அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா, நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டை (11) வெளியேற்றினார்.
மேலும் அபாரமாக பந்துவீசிய ஹர்ஷித் நீண்ட நேரம் நின்று ஆடிய மிட்செல் ஸ்டார்க் 26 (112) விக்கெட்டை கைப்பற்ற, அவுஸ்திரேலிய அணி 104 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா (Harshit Rana) 3 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்திய அணி 46 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது. தற்போது வரை இந்தியா விக்கெட் இழப்பின்றி 61 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025