Paristamil Navigation Paristamil advert login

ஏ.ஆர்.ரஹ்மான்னுக்கு ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது..!

ஏ.ஆர்.ரஹ்மான்னுக்கு ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது..!

22 கார்த்திகை 2024 வெள்ளி 14:22 | பார்வைகள் : 5159


மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் 'ஆடுஜீவிதம்' என்கிற திரைப்படம் வெளியானது. பல வருடமாக தயாரிப்பில் இருந்த இந்த திரைப்படம் தாமதமாக வெளியானாலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு இசையமைத்ததன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள திரை உலகிற்கு திரும்பி இருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த படத்தில் பாடலும் பின்னணி இசையும் பலராலும் பாராட்டப்பட்டன.

இந்த நிலையில் தற்போது 2024ம் வருடத்திற்கான இசை விருதுகளில் உயரிய விருதாக பார்க்கப்படும் ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா அவார்ட்ஸ் (எச்.எம்.எம்.அ) விருது நிகழ்ச்சிக்காக இந்த படத்தில் இடம் பெற்றிருந்த 'பெரியோனே' என்கிற பாடல், சிறந்த பாடல் பிரிவில் நாமினேட் செய்யப்பட்டது. அதேபோல், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான இசை என்கிற பிரிவில் பின்னணி இசைக்காகவும் என இரண்டு பிரிவுகளில் இந்த படம் நாமினேட் செய்யப்பட்டது.

இதில், ஆடுஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் இயக்குநர் பிளஸ்சி பெற்றுக் கொண்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்