இலங்கையில் வருட இறுதிக்குள் மின் கட்டணத்தில் திருத்தம்?

22 கார்த்திகை 2024 வெள்ளி 11:22 | பார்வைகள் : 3492
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கையினை இலங்கை மின்சார சபை இன்றுவரை சமர்ப்பிக்காத நிலையில், மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை இந்த வருடம் அறிவிக்க முடியாது என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக 4 அல்லது 5 வாரங்கள் செலவிடப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக, மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான புதிய முன்மொழிவுகளை இந்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025