600 கி.மீ போக்குவரத்து நெரிசல்.. 200,000 வீடுகளுக்கு மின் தடை! (தற்போதைய நிலவரம்)
22 கார்த்திகை 2024 வெள்ளி 08:03 | பார்வைகள் : 8127
இன்று காலை 8 மணி அளவில் 600 கி.மீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் நிலவியதாக வீதி போக்குவரத்து அவதானிப்பாளர்களான Bison futé அறிவித்துள்ளனர்.
பலத்த பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் மிகவும் மெதுவாகவே பயணிக்கக்கூடியதாக இருக்கிறது எனவும், கனரக வாகனங்கள் வீதிகளில் மிகவும் ஊர்ந்து செல்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல் து பிரான்சுக்குள் 150 கி.மீ வரை நெரிசல் பதிவாகியுள்ளது.
Yvelines, Essonne, Val-d'Oise, Seine-et-Marne ஆகிய இல் து பிரான்சின் மாவட்டங்களிலும், Sarthe மற்றும் Haut-Rhin மாவட்டத்திலும் இன்று காலை முதல் பாடசாலை போக்குவரத்துக்கள் தடைப்பட்டன. பல நூறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
நேற்று இரவு வெளியான தகவல்களின் படி 270,000 வீடுகளுக்கு மின்சாரத்தடை ஏற்பட்டிருந்ததாகவும், இரவிரவாக திருத்தப்பணிகள் இடம்பெற்றதாகவும், இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி, 200,000 வீடுகள் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக Normandy மாவட்டத்தில் அதிகபட்சமாக 70,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இல் து பிரான்சுக்குள் பல்வேறு பகுதிகளில் மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்ததை அடுத்து போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. Transilien P சேவை Tournan முதல் Coulommiers வரை தடைப்பட்டுள்ளது.
காலை முதல் Gare de Lyon நிலையத்தை வந்தடையும் தொடருந்துகள் 15 தொடக்கம் 30 நிமிடங்கள் வரை தாமதத்தைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan