Paristamil Navigation Paristamil advert login

நடிகர் ரஜினியுடன் சீமான் சந்திப்பு!

நடிகர் ரஜினியுடன் சீமான் சந்திப்பு!

22 கார்த்திகை 2024 வெள்ளி 06:42 | பார்வைகள் : 4000


நடிகர் ரஜினியை அவரது போயஸ் கார்டன் வீட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கும் வரை அவரை , நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரித்து பேசி வந்தார். ஆனால் விஜய் கட்சியின் கொள்கையை அறிவித்த பிறகு கடுமையாக விமர்சித்தார். இதுபோதாது என்று நாம் தமிழர் கட்சிக்குள்ளும் பிரச்னைகள் எழுந்துள்ளன. அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட கட்சிக்குள் நெருக்கடி அதிகரித்து வந்தாலும் சீமான் தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இச்சூழ்நிலையில், நடிகர் ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் சீமான் இன்று(நவ.,21) இரவு சந்தித்து பேசினார். இச்சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது என்ன ஆலோசிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், அரசியல் குறித்து பேசியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பு, ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்த போது, அவரை சீமான் விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்