Paristamil Navigation Paristamil advert login

சிரியாவின் மீது  இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல் ! 36 பேர் பலி, 50 பேர் காயம்

சிரியாவின் மீது  இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல் ! 36 பேர் பலி, 50 பேர் காயம்

21 கார்த்திகை 2024 வியாழன் 10:56 | பார்வைகள் : 7085


ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய அனைத்து நாடுகளுடனும் போர் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகின்றது.

சிரியாவின் மேற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 36 பேர் கொல்லப்பட்டனர். 

புதன்கிழமை மத்திய சிரியாவில் உள்ள பண்டைய நகரமான பல்மைராவில், இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

குறிப்பாக அல்-டான்ஃப் பகுதியில் இருந்து நகரின் பல கட்டிடங்களை குறிவைத்து, இஸ்ரேலின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. 

இதனால் அப்பகுதியில் பாரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக, ராணுவ ஆதாரத்தை மேற்கோள்கட்டி அரசு செய்தி நிறுவனமான SANA தெரிவித்துள்ளது.  

மேலும், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் தொழில்துறை மண்டலத்தை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரிய ஊடகம் முன்னதாக தெரிவித்தது.

இந்த தாக்குதல்களில் 36 பேர் உயிரிழந்ததாகவும், 50 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   
 

வர்த்தக‌ விளம்பரங்கள்