செயற்கை நுண்ணறிவு மாநாடு.. எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு!!

20 கார்த்திகை 2024 புதன் 05:25 | பார்வைகள் : 4914
வரும் பெப்ரவரி மாதம், பிரான்சில் செயற்கை நுண்ணறிவு மாநாடு இடம்பெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோருக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் பரிசில் பெப்ரவரி 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இந்த மாநாடு இடம்பெற உள்ளது. இதில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாட்டுத்தலைவர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்ள உள்ளார்.
இதில் Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் உரிமையாளரும், X சமூகவலைத்தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள விரும்புவதாகவும், அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025