கலகலப்பு- 3 அறிவிப்பை வெளியிட்ட குஷ்பூ!

18 கார்த்திகை 2024 திங்கள் 14:51 | பார்வைகள் : 6092
தமிழரான கண்ணன் ரவி என்பவர் துபாயில் தொழிலதிபராக இருந்து வரும் நிலையில், இவர் ஏற்கனவே சாந்தனு நடித்த ’ராவண கோட்டம்’ என்ற படத்தை தயாரித்து உள்ளார் என்பதும், இந்த படத்திற்கு நல்ல பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாக்யராஜ் உடன் ஏற்பட்ட நட்பு காரணமாகவே இந்த படத்தை சாந்தனுவை வைத்து அவர் தயாரித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தொழில் அதிபர் கண்ணன் ரவி தயாரிக்கும் அடுத்த படம் ’கலகலப்பு 3’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
கண்ணன் ரவியின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து ’கலகலப்பு 3’ படத்தை தயாரிப்பதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் 2025 ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ’கலகலப்பு’, ’கலகலப்பு 2’ ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மூன்றாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவா மற்றும் விமல் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025