Paristamil Navigation Paristamil advert login

மன்னாரில் அச்சுறுத்தும் மர்ம காய்ச்சல்

மன்னாரில் அச்சுறுத்தும் மர்ம காய்ச்சல்

18 கார்த்திகை 2024 திங்கள் 12:52 | பார்வைகள் : 6325


மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் சுமார் 25 இராணுவ வீரர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.    

காய்ச்சல்  தொற்றையடுத்து, அங்குள்ள இராணுவ வீரர்களை குறித்த முகாமிலேயே  தனிமைப்படுத்தியுள்ளதாக இராணும் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் குழுவொன்றை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

முகாமில் உள்ள மேலும் முகாமில் இருக்கும் மேலும் 500 இராணுவ வீரர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

கடந்த 11 ஆம் திகதி  முதல்  குறித்த இராணுவ முகாமில் காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்