கோல் மழை பொழிந்த இங்கிலாந்து: அயர்லாந்து அணிக்கு மரண அடி
18 கார்த்திகை 2024 திங்கள் 08:54 | பார்வைகள் : 4389
நேஷன்ஸ் லீக் தொடரில் இங்கிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது.
Wembley மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதின.
அயர்லாந்து அணி முதல் பாதியில் நெருக்கடி கொடுக்க, இங்கிலாந்தால் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் இங்கிலாந்து கோல் கணக்கை தொடங்கியது.
53வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஹாரி கேன் (Harry Kane) கோல் அடித்தார். அடுத்த இரண்டு நிமிடங்களில் இங்கிலாந்தின் Anthony Gordon கோல் அடிக்க, 58வது நிமிடத்திலேயே சக வீரர் Conor Gallagher கோல் அடித்தார்.
இந்த தாக்குதலில் இருந்து அயர்லாந்து அணி மீள்வதற்குள், இங்கிலாந்தின் Jarrod Bowen (75வது நிமிடம்) கோல் அடித்தார்.
அவரைத் தொடர்ந்து Taylor Harwood-Bellis 79வது நிமிடத்தில் கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 5-0 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது.
இப்போட்டியின் 51வது நிமிடத்தில் அயர்லாந்தின் Liam Scales சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan