Paristamil Navigation Paristamil advert login

மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி.. இருவர் காயம்!!

மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி.. இருவர் காயம்!!

21 மார்கழி 2024 சனி 10:11 | பார்வைகள் : 5791


மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தென் கிழக்கு மாவட்டமான Isère இல் நேற்று டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள Bourg-d'Oisans தொடக்கம்  Saint-Christophe-en-Oisans வரையான நகரங்களை இணைக்கும் RD530 சாலையில் திடீரென இரவு 8.30 மணி அளவில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் மூவர்கள் சிக்குண்ட நிலையில், அவர்களில் ஒருவர் பலியாகியுள்ளார். ஏனைய இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதி போக்குவரத்து இன்று காலை நிலவரப்படி தடைப்பட்டுள்ளனது. குறித்த வீதி இதே போன்றதொரு மண்சரிவில் அண்மையில் சிக்கி, கடந்த ஜூலை மாதத்திலேயே திறக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்