54 ஓட்டங்களுக்கு சுருண்ட ஜிம்பாப்வே! மிரட்டல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்

20 மார்கழி 2024 வெள்ளி 07:05 | பார்வைகள் : 3542
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 232 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ஓட்டங்கள் குவித்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய செடிகுல்லா அடல் (Sediqullah Atal) 104 ஓட்டங்களும், அப்துல் மாலிக் (Abdul Malik) 84 ஓட்டங்களும் குவித்து மிரட்டினர்.
வெற்றி இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி மோசமான தோல்வியை சந்தித்தது.
17.5 ஓவர்கள் முடிவிலேயே வெறும் 54 ஓட்டங்கள் மட்டும் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
நவீத் சத்ரன், ஏஎம் கசன்பர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 232 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025