வவுனியாவில் மாரடைப்பால் அதிகரிக்கும் மரணங்கள்

19 மார்கழி 2024 வியாழன் 12:59 | பார்வைகள் : 3786
வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்துள்ளதாக வவுனியா சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாரடைப்பால் இறந்தவர்கள் தொடர்பில் வினவியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 20 வயது தொடக்கம் 40 வயது வரையானவர்களில் ஒருவரும் 40 தொடக்கம் 60 வயது வரையானவர்களில் 13 பேரும் 60 தொடக்கம் 100 வயது வரையானவர்களில் 31 பேருமாக 45 பேர் இவ்வாறு மாரடைப்பால் மரணமாகியுள்ளனர்.
அண்மைக்காலமாக வவுனியாவில் மாரடைப்பால் மரணிப்போரின் தொகை அதிகரித்து காணப்பட்ட நிலையில் அதற்கான பல்வேறு காரணங்களும் சுகாதார திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025